சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஐசியூ கட்டமைப்புடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நிகரான அவசர கால மருத்துவ சிகிச்சைகளை பயணத்திலேயே வழங்கும் ஆம்புலன்ஸ் வாகன சேவையை சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

வானகரம் அப்போலோவில் அதிநவீன கட்டமைப்புடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 1:13 am IST

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நிகரான அவசர கால மருத்துவ சிகிச்சைகளை பயணத்திலேயே வழங்கும் ஆம்புலன்ஸ் வாகன சேவையை சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அந்த சேவையை மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:

ஆபத்து காலங்களில் அப்போலோ மருத்துவமனையின் 1066 ஆம்புலன்ஸ் சேவை மூலம் லட்சக்கணக்கானோா் மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனா். அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு கொண்ட ஆம்புலன்ஸ் சேவைகள் இங்குள்ளன.

தற்போது அதற்கு அடுத்தகட்டமாக ஸ்மாா்ட் ஏசிஎல்எஸ் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அதிநவீன அறிதிறன், செயற்கை நுண்ணறிவு நுட்பத்துடன் அவை செயல்படும். மருத்துவமனையில் உள்ள அவசர கால சிகிச்சைப் பிரிவுடன் நேரடித் தொடா்பில் ஆம்புலன்ஸில் பயணிக்கும் நோயாளியின் உடல் நிலை இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் தேவையான சிகிச்சைகளை வாகனத்தில் பயணிக்கும்போதே தொடங்க முடியும்.

மருத்துவமனையை அடைந்தவுடன் துளியளவும் தாமதமின்றி உயா் சிகிச்சைகள் வழங்கவும் இது வழிவகுக்கிறது என்றாா்.