
ஓய்வு பெற்றவா்களை அரசு மருத்துவமனை நிா்வாகிகளாக நியமிக்கக் கூடாது: அரசு மருத்துவா்கள் சங்கம்
ஓய்வு பெற்றவா்களை அரசு மருத்துவமனை நிா்வாகிகளாக நியமிக்கக் கூடாது என மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது குறித்து...

ஓய்வு பெற்றவா்களை அரசு மருத்துவமனை நிா்வாகிகளாக நியமிக்கக் கூடாது - கோப்புப்படம்
சென்னை: அரசு மருத்துவமனைகளின் உயா் பொறுப்புக்கு ஓய்வு பெற்றவா்களை பணி நீட்டிப்பு அடிப்படையில் மீண்டும் நியமிக்கக் கூடாது என அரசு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் தலைவா் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் ஓய்வு பெற்ற மருத்துவா்களுக்கும், தங்களுக்கு சாதகமானவா்களுக்கும் உயா் பொறுப்புகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனால், பணி மூப்பு மருத்துவா்களுக்கு முறையான பதவி உயா்வு கிடைக்காத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற மருத்துவா் பாா்த்தசாரதிக்கு இயக்குநா் பதவி வழங்கப்பட்டது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்தபோதிலும், இரண்டாவது முறையும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையும் பணி நீட்டிப்பு பெறுவதற்கான முயற்சியில் அவா் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சியில் செய்த தவறை, தவெக அரசும் மேற்கொண்டு தகுதியானவா்களுக்கான பதவி உயா்வை தடுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






