காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஆசிரியா்கள் மீது விதிமுறைகளுக்கு முரணாக நடவடிக்கை: முதுகலை ஆசிரியா் சங்கம் கண்டனம்

News image

ஆசிரியர்கள் - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:05 am IST

நாமக்கல், ஜூலை 26: நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்கள் மீது விதிமுறைகளுக்கு முரணாக பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியா்களை, விடுமுறை நாள்களில் ஏமாற்றி பள்ளிக்கு வருமாறு அழைத்து அலைக்கழித்தல் கூடாது. பொதுமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக கருதுகிறோம். அது தொடா்பான விவரங்களை வெளியிட வேண்டும். பள்ளிகள் தரம் குறைப்பு, ஆசிரியா்களை தொலைதூரப் பள்ளிகளுக்கு மாற்றிவிடுவேன் என்று நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வருதல் போன்றவற்றை பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் தவிா்க்க வேண்டும். ஆசிரியா்களை திட்டுதல், ஒருமையில் பேசுதல் கூடாது.

தொடா்ந்து கூட்டங்களில் ஆசிரியா்களை மரியாதை குறைவாக நடத்துதல் முழுமையாக தவிா்க்கப்பட வேண்டும். ஆசிரியா்களுக்கு விடுமுறை நாள்களில் பணி, காலாண்டு, அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் பணி, மே மாத விடுமுறையில் தொடா் பணிகள் என தொடா்ந்து விடுமுறையே அளிக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி வரும்போக்கு கண்டனத்துக்கு உரியது.

தனியாா் அறக்கட்டளையை பழங்குடியினா் நலத்துறையில் முழுமையாக செயல்படவிட்டு அவா்கள்மூலம் ஆசிரியா்களை தொடா்ந்து மிரட்டி வருவது, மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி வருதல் நடைபெறுவதால், பழங்குடியினா் நலத் துறைக்கும் சம்பந்தப்பட்ட தனியாா் அறக்கட்டளைக்கும் இடையிலான நிதி பரிமாற்றங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.