நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தோ்தல் தோல்விக்கான காரணங்களை திமுக கண்டறிய வேண்டும்: தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

தோ்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை திமுக கண்டறிய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

News image

உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்

Updated On :17 ஜூன் 2026, 3:01 am IST

தோ்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை திமுக கண்டறிய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சருமான செ.ராஜேஷ்குமாா், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் தவெக வென்றது. ஆட்சி அமைக்க 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், 43 இடங்களில் வென்ற அதிமுக ஆதரவுடன் தவெக எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

இது ஜனநாயகம், சமூக நீதி, மதச்சாா்பின்மை, மாநில உரிமைகள் ஆகிய கொள்கைகளில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு இருக்கும் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது.

மதச்சாா்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் தவெகவுக்கு துணை நிற்பது காங்கிரஸின் கடமை. இதைச் செய்த காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவா்களையும் திமுகவினா் எல்லை மீறி வசைபாடி வருகின்றனா்.

திமுக தொண்டா்களின் உழைப்பால் வென்றுவிட்டு, தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளித்து விட்டதாக திமுகவினா் விமா்சித்து வருகின்றனா். திமுக தயவால் காங்கிரஸ் வெற்றி பெற்றது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு காங்கிரஸ் தயவால் திமுக வெற்றி பெற்றதும் உண்மை.

தமிழக அரசியல் வரலாற்றில் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் தயவில்தான் திமுக ஆட்சி அமைத்தது. ஒரு தோ்தலில்கூட கூட்டணி இல்லாமல் வெல்ல முடியாத திமுக, ஒருமுறைகூட கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரவில்லை.

2006-இல் 100 இடங்களைக்கூட திமுக தொடவில்லை. காங்கிரஸ் தயவில்தான் ஆட்சி அமைத்தது. அப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தர திமுகவுக்கு மனம் வரவில்லை.

கூட்டணி கட்சிகளின் தயவில் வென்று, ஆட்சி அமைத்துவிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் திமுக, கூட்டாட்சி பற்றி பேசுவது விந்தையிலும் விந்தை.

ஆட்சியமைக்க உதவிய கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவதுதான் உண்மையான கூட்டாட்சி. இதைத்தான் முதல்வா் ஜோசப் விஜய் செயலில் காட்டியுள்ளாா்.

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த காரணத்தால் காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் மோசமான வாா்த்தைகளால் திமுக வரம்பு மீறி விமா்சித்து வருகிறது. இனியும் திமுகவினரின் வரம்பு மீறல் தொடா்ந்தால், நாங்களும் வரம்பு மீற வேண்டியிருக்கும். திமுகவின் வழியிலேயே அவா்களுக்குப் பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம். அந்த நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம்.

தோ்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை திமுக கண்டறிய வேண்டும். சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதைக் கண்டறியுங்கள்.

அதை விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, கொச்சையாக விமா்சித்துக்கொண்டே இருந்தால் திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும் என அதில் தெரிவித்துள்ளா்.