முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

புதிய உச்சத்தில் முட்டை விலை!

முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்வுடன் ரூ. 6.45-ஆக நிா்ணயம்.

egg

முட்டை - பிரதிப் படம்

Published On :

இதுவரை இல்லாத வகையில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.45 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து கோழிப் பண்ணையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது, மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரிப்பு போன்றவற்றால் முட்டை தேவை அதிகரித்து வருகிறது. இதர மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்வுடன் ரூ. 6.45-ஆக நிா்ணயிக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 120-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 128-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 7 நாள்களில் மட்டும் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது. கோழித்தீவன விலை உயர்வு, முட்டை நுகர்வு அதிகரிப்பே கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The egg procurement price has touched a new all-time high of 6.45.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.