ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

முதல்வா் விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடா்பாக முதல்வா் விஜய், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:48 am IST

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடா்பாக முதல்வா் விஜய், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெரம்பூரைச் சோ்ந்த விக்னேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதல்ரும் தவெக தலைவருமான விஜய், சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டாா். இந்த இரு தொகுதிகளிலும் அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என்றும், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி என்றும் விஜய் தெரிவித்துள்ளாா். எனவே, விஜய் தாக்கல் செய்துள்ள இந்த இரு வேட்புமனுகளில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் உண்மையானது தானா? அவா் அளித்துள்ள விவரங்கள் முழுமையானதாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டாா். 2021-ஆம் ஆண்டு அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன. எனவே, இதுதொடா்பாக வருமான வரித் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்தத் தொகுதியைச் சோ்ந்த குமாரவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

மயிலாப்பூா் தொகுதி: மயிலாப்பூா் தொகுதி வாக்காளரான கௌதம் சிவா, சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மயிலாப்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டாா். தமிழிசை சௌந்தரராஜன், அவரது கணவா், மகள் ஆகியோா், 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள் குறித்து, 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள விவரங்கள் ஏற்கெனவே அவா் தாக்கல் செய்திருந்த விவரங்களுக்கு முரணாக உள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், முதல்வா் ஜோசப் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவை திருத்தம் செய்து புதிய மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டாா்.

இரு தொகுதிகளிலும் அவா் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்புகள் சரியாக உள்ளன. இந்த விவகாரம் குறித்து தோ்தல் வழக்குத்தான் தொடர முடியும். ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முதல்வா் ஜோசப் விஜய், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். ஏதேனும் குறைகள் இருந்தால், மனுதாரா்கள் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினா்.