ஏப்ரல் 30ஆம் தேதி திருமணமான நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்த 26 வயது பெண் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.
வரதட்சிணை கேட்டு கணவரும் குடும்பத்தாரும் தொடர்ந்து மகளை துன்புறுத்தி வந்ததாக, பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாகா தில்கர், கடந்த செவ்வாயன்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து வந்த புகாரினைத் தொடர்ந்து, விசாகாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை, உடல் கூராய்வுக்கு அனுப்பிவைத்து, விசாரணையைத் தொடங்கினர்.
புதன்கிழமை, விசாகாவின் கணவர் மருத்துவர் நிதின் தில்கர், அவரது தாய் சாயா தில்கர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாகாவின் பெற்றோர் அளித்திருக்கும் புகாரில், வீட்டின் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி தில்கர், விசாகாவை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், அக்கம் பக்கத்தினருடன் பேசினால், அதனை சிசிடிவி மூலம் கண்காணித்து, அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேசியதற்காக, விசாகாவை கடுமையாக தாக்கிய இரண்டு நாள்களுக்குப் பின் அவரது தறகொலை நிகழ்ந்துள்ளது என்றும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
விசாகாவின் உறவினர்கள் இது பற்றி கூறுகையில், பெற்றோரிடம், விசாகா, தன்னுடைய கணவர் வீட்டில் நடக்கும் கொடுமைகள் குறித்து கூறியிருக்கிறார். அவர்களும் விசாகாவை மீண்டும் தங்கள் வீட்டுக்கே அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் அதற்குள் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதும், அதனை செல்போன் மூலம் தில்கர் கண்காணித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள மூன்று பேர் கொடுத்த துன்புறுத்தலே விசாகா தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கும் என்ற தெரிய வந்துள்ளது, மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறார்கள்.
Summary
CCTV surveillance! Wife commits suicide just a month after marriage; doctor arrested!
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










