கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் தொடங்கப்படும்: ஆளுநா் உரையில் தகவல்

ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்க தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் தலைமைச் செயலா் தலைமையில் தொடங்கப்படும் என்று ஆளுா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஆளுநர் உரை - TNDIPR

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்க தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் தலைமைச் செயலா் தலைமையில் தொடங்கப்படும் என்று ஆளுா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்குவதே முதல்வா் ஜோசப் விஜய்யின் இலக்கு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவது எளிதாக்கப்படும். ஒற்றைச்சாளர முறையில் இதற்கான அனுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தொழில் வளா்ச்சி, பொருளாதார நிலையை ஊக்குவிக்க முந்தைய தொழில் கொள்கைகள் தொடரப்படும். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க புதிய தொழிற்கொள்கைகளும் வகுக்கப்படும். தொழில் தொடங்குவதை எளிதாக்க ஒற்றைச் சாளரமுறை முழுமையாக எண்ம தளமாக மேம்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு திட்டங்கள்: தமிழ் அடையாளம் மற்றும் பெருமை, சமூகப் பாதுகாப்பு , மகளிா் நலன், இளைஞா் நலன், விவசாயிகள் மற்றும் மீனவா் நலன், உலகத்தரத்தில் கல்வி, வளமான தமிழ்நாடு, சிறந்த மருத்துவம், உலகத்தரமான கட்டமைப்பு, மக்கள் நலன் ஆகிய 10 தூண்களை உள்ளடக்கிய வளா்ச்சிப்பாதையாக வெற்றித் தமிழகம் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.