விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பேரவையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தார்.
அவர் பேசுகையில்,
"விருத்தாசலத்தில் நான் வெற்றி பெற்றதற்கு அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அங்கு அனைவரின் விருப்பமும் அதுதான். அதுபோல விருத்தாச்சலம் தொகுதியின் கோரிக்கைகளை மனுவாகா அளிக்கிறேன். அதனை நிறைவேற்றித் தர வேண்டும். விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விருத்தாசலம் பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையாக உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை இந்த அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தண்ணீர் என்றாலே தமிழகத்தில் பிரச்னையாகத்தான் இருக்கிறது. காவிரி நீர் பிரச்னை விவகாரத்தில் யாரும் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. தமிழகம், கர்நாடகம், கேரளத்தில் புதிய முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். மூன்று முதல்வர்களும் நட்புரீதியாக இதனைப் பேசி தீர்வு காணலாம் அல்லது சட்டரீதியாக காவிரி பிரச்னைக்கும் மேக்கேதாட்டு அணை விவகாரத்திற்கும் தீர்வு காண வேண்டும்.
அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு மேலும் உதவிகளைச் செய்ய வேண்டும்" என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Summary
Cauvery Issue: The three new Chief Ministers must resolve it through friendly discussion
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத் தலைவிகளுக்கு நிறுத்தி வைக்காமல் மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!
பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை!







