கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது குறித்து தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் 2026}ஆம் ஆண்டின் நான்கு மாத காலத்தில் 2.63 லட்சம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாகவும்,17 பேர் இறந்துள்ளதாகவும் வெளியாகியிருந்த செய்திகளை சுட்டிக்காட்டியிருந்தது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக பிடித்துச் செல்லப்படும் நாய்களை மீண்டும் அதேபகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும், கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இரு மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் போக்குவரத்து ஆணைய உத்தரவு ரத்து: உயா்நீதிமன்றம்

கோடை வெயில் பாதிப்பை சமாளிக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு!

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

தருமபுரியில் 5 மதுக்கடைகள் மூடல்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




