செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

மொஹரம் பண்டிகை! யாருக்கெல்லாம் விடுமுறை? பேருந்து கிடைக்குமா? அனைத்து விவரங்களும்

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை என்பதால் யாருக்கெல்லாம் விடுமுறை, பேருந்துகள் கிடைக்குமா என்பது பற்றி..

News image

பேருந்து வசதி - file photo

Updated On :23 ஜூன் 2026, 3:17 pm IST

இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஜூன் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மொஹரமை பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாள். பள்ளிகள் திறந்து இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், ஒரு அரசு விடுமுறைகூட வராதா என ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இனிப்பான செய்தியாக வந்திருக்கிறது மொஹரம் பண்டிகை.

மொஹரம் பண்டிகை, வார இறுதிநாள்கள், முகூர்த்த நாள்களையொட்டி, சென்னையிலிருந்து 1,432 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என வார இறுதி நாள்களும் சேர்ந்து வருவதால், சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாள்களில் பேருந்துகள் மூலம் வெளியூர் செல்ல விரும்புவோர், www.tnstc.in அல்லது டிஎன்எஸ்டிசி செல்போன் செயலி மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

யாருக்கெல்லாம் விடுமுறை?

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தேசிய வங்கிகளுக்கு பொது விடுமுறையாகும்.

என்ன பண்டிகை?

மொஹரம் பண்டிகை ஜூன் மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய நாள்காட்டியின்படி, மொஹரம் மாதத்தின் 10-வது நாள் அஷுரா என்று அழைக்கப்படுகிறது. மிக முக்கிய தியாகத்தை (கர்பலா போர்) நினைவுகூரும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது.

Summary

Muharram Festival Who gets a holiday? Will buses be available?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.