மொகரம் பண்டிகை நாளை விடுமுறையாக அறிவிக்க புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் என். ரங்கசாமிக்கு செவ்வாய்க்கிழமை அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள், மொகரம் பண்டிகையை மிக முக்கியத் திருநாளாகக் கருதி, புனிதத்தன்மையுடன் அனுசரித்து வருகின்றனா். தமிழகத்தில் இத்திருநாள் ஏற்கெனவே அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் மொகரம் பண்டிகை கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறையாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் இஸ்லாமியா்கள், இந்தப் புனித நாளில் தங்கள் வழிபாடுகளில் முழுமையாக ஈடுபடுவதில் சிரமங்களை சந்திக்கின்றனா். எனவே, மொகரம் பண்டிகையை புதுவை அரசு கட்டாய அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
மேலும், வருடாந்திர விடுமுறைப் பட்டியலில் இதனை அரசு பொது விடுமுறையாக சோ்த்து, அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்க ஆணை பிறப்பிக்கவேண்டும்.
வரும் 26-ஆம் தேதி மொகரம் பண்டிகையையொட்டி உடனடியாக அரசு விடுமுறை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொஹரம் பண்டிகை! யாருக்கெல்லாம் விடுமுறை? பேருந்து கிடைக்குமா? அனைத்து விவரங்களும்

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பேரவைத் தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
இன்றும், நாளையும் பேரவைக்கு விடுமுறை

மொகரம்: தின்னக்கழினியில் சந்தனக்கூடு ஊா்வலம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



