புதுச்சேரியில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூழியன் குளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது சுமார் 400 ஆண்டுகள் பழமையான மூழியன் குளம். 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த குளம், கிராம மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வந்தது. இங்கு 4 கிணறுகள் ஊற்று நீர் உள்ளதாக தெரிய வருகிறது.
2025 ஏப்ரல் மாதம் தொடங்கிய சீரமைப்பு பணிகள், கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறைவுபெற்றது.
இந்த குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கொண்டு வந்தார்.
தொடர்ந்து, குளத்து நீரில் மலர் தூவியும், மரக்கன்றுகளையும் நட்டார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தொகுதி எம்.எல்.ஏ. ராமு, உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆதார்ஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் பலத் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனசுந்தராம்பாள் தொண்டு நிறுவனத் தலைவர் ஆனந்தன் மற்றும் பூரணாங்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Summary
Union Finance Minister Nirmala Sitharaman dedicated the over 400-year-old Mooliyan Pond to public use in Puducherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயன்பாட்டுக்கு வந்தது நொய்டா சா்வதேச விமானநிலையம்: நிலம் வழங்கிய விவசாயிகள் முதல் விமானத்தில் பயணம்

சாயா்புரத்தில் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்எல்ஏ உத்தரவு

வாலாஜாபேட்டை அருகே குளத்தில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவி பலி






