முதல்வர் விஜய் தனது ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிவிட்டார் என திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் இதர உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்து தீவிரக் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆந்திர மாநித்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும், தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நெருங்கிய உதவியாளர்களும் நண்பர்களும் ஆவர். இவர்கள் அரசில் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகிலேயே அவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள்?
முதல்வர் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார். இத்தகைய நபர்களை இதில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள், அலுவல் விதிகள் மற்றும் அவரது ரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றைப் பின்பற்றுவது குறித்து தீவிரக் கவலைகளை எழுப்புகிறது.
இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகளை முதல்வர் பகிரங்கப்படுத்த வேண்டும்; அதோடு, எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்! என கூறியுள்ளார்.
Summary
Serious questions emerge concerning the presence of John Arockiasamy and Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by CM C. Joseph Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







