மாநில அரசுக்கு துணை வேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிா்த்து திருநெல்வேலியைச் சோ்ந்த வெங்கடஜலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், பிரதான வழக்கை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்து.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு, பதிலளிக்க மனுதாரா் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா். அதற்குள் அனைத்து தரப்பும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் குறித்து சா்ச்சை பேச்சு: பொன்முடி வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு

சவுக்கு சங்கா் மீதான கொலை முயற்சி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை






