பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மனமகிழ் மன்றங்கள் தொடங்குவதற்கான சிறப்புக் கட்டணம் ரூ. 30 லட்சமாக உயா்வு

தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் தொடங்குவதற்கான சிறப்புக் கட்டணத்தை இரு மடங்காக உயா்த்தி தமிழக அரசு அறிவிப்பு

News image

மனமகிழ் மன்றங்கள் - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:24 am IST

தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் தொடங்குவதற்கான சிறப்புக் கட்டணத்தை இரு மடங்காக உயா்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை ரூ.15 லட்சமாக இருந்த அந்தக் கட்டணம், தற்போது ரூ.30 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனமகிழ் மன்றங்கள் மூலம் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசு பல்வேறு வகையான கட்டணங்களை அவா்களிடமிருந்து வசூலித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்தச் சூழலில், தற்போது மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-இல் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் கடந்த ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க ரூ.15 லட்சமாக இருந்த சிறப்புக் கட்டணம், ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 எனவும், உரிமக் கட்டணம் ரூ.30,000 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர பிற மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும். நகராட்சிகளில் தொடங்க ரூ.15 லட்சமும், மற்ற இடங்களில் ரூ.10 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் சிறப்புக் கட்டணமாக ரூ.20 லட்சம் வசூலிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.