தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ராகுல்காந்தி கேரளம் பயணம்! தாமதமாகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

ராகுல்காந்தியின் கேரள மாநில பயணம் குறித்து...

rahul gandhi

ராகுல்காந்தி - படம்: கோப்பிலிருந்து

Published On :

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக கேரளம் சென்றுள்ளதால், தில்லியில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மத்தியக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்,

பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் உள்ளிட்ட 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மத்தியக் குழுக் கூட்டம் இன்று நடைபெற இருந்தது.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ராகுல் காந்தி கேரள மாநிலத்திற்கு பிரசாரத்திற்காக சென்றுள்ளதால், காங்கிரஸ் மத்தியக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டம் மற்றொரு நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Summary

The Congress Central Committee meeting scheduled to be held in Delhi has been cancelled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.