தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்துக்கு திமுக தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அண்ணா அறிவாலயம் வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி என இரண்டிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், வெற்றி சான்றிதழ் பெற்றுக் கொள்ள நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் செல்கிறார்.
நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய், அடையாறு சென்று தன்னுடைய பெற்றோரிடம் ஆசி பெற்றுக்கொண்டு நுங்கம்பாக்கம் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் வரும் வழியெங்கும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெளியே வரும் விஜய், வெற்றி குறித்து என்ன சொல்லப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது.
விஜய் வரும் வாகனத்தை இளைஞர்கள் நெருங்கி வருவதும், இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு பின்தொடர்வதும் காவல்துறையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் வாகனம் செல்லும் சாலையோரங்களில் சாலைத் தடுப்புகள் மீது தவெக ஆதரவாளர்கள் ஏறி நின்றுகொண்டிருப்பது வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
இதற்கிடையே, தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், அண்ணா அறிவாலயம் பொலிவிழந்து காணப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். முக்கிய அமைச்சர்களுடன் மற்றும் தலைவர்களுடன் திமுக தோல்வி குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
MK Stalin arrives at Arivalayam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்வி: கள ஆய்வுக் குழுவுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்
எம்.எல்.ஏ.க்களை ஒளித்து வைக்கவேண்டிய பயமில்லை: மு.க. ஸ்டாலின்

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




