காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தவெக ஒரு 'சீட்' கூட பெறாத 8 மாவட்டங்கள்!

8 மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது பற்றி...

TVK Fails to win Even a Single Seat in 8 Districts, Including Tenkasi and Kanyakumari

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் - IANS

Published On :

தமிழகத்தில் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தவெக தயாராகி வருகிறது.

திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு, தெற்கு, மேற்கு மாவட்டங்களில் தவெக அதிக இடங்களை வென்றிருந்தாலும் தெற்கில் தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக, அதிமுகவை வீழ்த்தி அதிக இடங்களில் வென்றுள்ளது தவெக. எனினும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் கணக்கைத் தொடங்கவில்லை.

8 மாவட்டங்கள் என்னென்ன?

தென்காசியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் திமுக - 4, அதிமுக - 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக 5, அதிமுக - 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக பெற்றுள்ள 73 தொகுதிகளில் இந்த 2 மாவட்டங்களின் பங்கு அதிகம்.

அதேபோல அரியலூரில் அதிமுக - 2,

மயிலாடுதுறையில் திமுக - 3

நாகப்பட்டினத்தில் திமுக - 2, அதிமுக - 1

நீலகிரி திமுக - 2, அதிமுக - 1,

திருவாரூரில் திமுக - 2, அதிமுக - 2

விழுப்புரத்தில் திமுக - 3, அதிமுக -4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளும் அடங்கும்.

தவெக 100க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றிருந்தாலும் இந்த 8 மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

Summary

TVK Fails to win Even a Single Seat in 8 Districts, Including Tenkasi and Kanyakumari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.