பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தோற்றாலும் தோல்வியில்லை! வெற்றி நிச்சயம்! மாணிக்கம் தாகூரின் பதிவு வைரல்

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் பதிவு வைரல்...

Manickam Tagore

மாணிக்கம் தாகூர். - கோப்புப் படம்

Published On :

'தோற்றாலும் தோல்வியில்லை நம்மிடம்' என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று கூறியுள்ளார். மேலும், மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மாநில காங்கிரஸ் கமிட்டியே இதுபற்றி முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.

அதேபோல நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதுகுறித்து முடிவு செய்ய சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்! தோற்றாலும் தோல்வியில்லை — நம்மிடம்! - பாரதியார்" என்று பதிவிட்டுள்ளார்.

இது தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதைக் காட்டுவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Even if we lose, it is not defeat! Victory is certain: Manickam Tagores post goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.