பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

பெண்களுக்குத் தொகுதியை விட்டுக்கொடுக்க மோடியும் அமித் ஷாவும் தயாரா? மாணிக்கம் தாகூர் சவால்

பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தொகுதிகளை பெண்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால்

News image

மோடி | மாணிக்கம் தாகூர் | அமித் ஷா - சித்திரிப்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 10:24 am

பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அவர்களின் தொகுதிகளை பெண்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.

விருதுநகர் எம்.பி.யான காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "2023 மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் உறுதியளித்தபடி, அனைத்து 543 தொகுதிகளிலும் 33 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமாயின், எனது விருதுநகர் தொகுதியை விட்டுக்கொடுக்க நான் தயார்.

ஆனால், மோடியும் அமித் ஷாவும் வாரணாசியையும் காந்திநகரையும் விட்டுக்கொடுக்க ஏன் தயாராக இல்லை? இந்தத் தயக்கத்துக்கு என்ன காரணம்?

இதனை விடுத்து, மாறாக புதிய தொகுதிகளை உருவாக்குவது பற்றி பேசுகின்றனர்.

உண்மையில், அவர்கள் சமூக மாற்றத்தைத் தவிர்ப்பது தெளிவாகத் தெரிகிறது. மகளிர் இடஒதுக்கீடு என்பது பாரபட்சமானதாக இருக்க முடியாது.

அது நியாயமானதாகவும், உடனடியானதாகவும், தற்போதுள்ள தொகுதிகள் முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

தொகுதி மறுவரையினாலோ திசைதிருப்பும் தந்திரங்களாலோ தாமதப்படுத்துதல் கூடாது. இந்தப் போராட்டம் எளிதானதே. இது உண்மையான பிரதிநிதித்துவமா? அல்லது அரசியலுக்கானதா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள், எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.

Summary

Congress MP Manickam Tagore offers to give up seat, questions PM Modi - Amit Shah on Women's Quota bill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.