கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

திமுகவுடன் நிற்கிறோம்; தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!

ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிராகரித்துள்ளது.

News image

காதர் மொகிதீனுடன் தவெக அருண் ராஜ் - எக்ஸ்

Updated On :7 மே 2026, 4:41 pm IST

ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று (மே 7) மீண்டும் நிராகரித்துள்ளது.

நேற்று கடிதம் மூலம் தவெக ஆதரவு கோரிய நிலையில், தவெக நிர்வாகி அருண்ராஜ் இன்று நேரடியாக காதர் மொகிதீனை சந்தித்து ஆதரவுகோரினார். தாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடிக்க விரும்புவதாகக் கூறி தவெக அழைப்பை ஐஎம்யுஎல் நிராகரித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 118 இடங்கள் தேவை என்பதால் இதர கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வருகிறது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு காங்கிரஸ் (5 எம்.எல்.ஏக்கள்) ஆதரவு தெரிவித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை என்பதால், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனை சந்தித்து தவெகவின் அருண் ராஜ் ஆதரவு தருமாறு கோரினார். ஆனால், தாங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நீடிக்க விரும்புவதாக அருண் ராஜுக்கு பதில் அளித்துள்ளனர்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முடிவுக்கு ஐஎம்யுஎல் கட்டுப்படும் என்றும், திமுக உடனான உறவு என்பது அரசியலுக்கானது மட்டுமல்ல, கொள்கை சார்ந்தது எனவும் காதர் மொகிதீன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Indian Union Muslim League Rejects TVK's Invitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.