தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கக் கோரி அக்கட்சியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, தவெகவுக்கு இன்னமும் 2 இடங்கள் குறைவாக இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்தால், விஜய் இன்று மாலையே தமிழக முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து இன்று காலை 11 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பார் என்று காலை முதலே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் நிர்வாகிகள், அரசியல் நகர்வுகள் குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று மாலை 4 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா என்பதை சனிக்கிழமை காலை அறிவிப்பதாக தொல். திருமாவளவன் நேற்று கூறியிருந்த நிலையில், இன்று மாலை அறிவிக்கப்படும் என மீண்டும் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று மாலை இணையவழியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் அண்மைய அரசியல் நெருக்கடி குறித்து முன்னணி தோழர்களோடு தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இன்று காலை முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவு இன்று மாலை 4 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாமதத்தின் பின்னணியில் இருப்பது என்ன? ஆதரவு அல்லது இல்லை என்பதை தெரிவிக்க இத்தனை காலம் கடத்துவது ஏன் என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
விசிக சார்பில் தவெகவுக்கு முக்கிய நிபந்தனைகள் ஏதேனும் விதிக்கப்படுமா? அது குறித்துதான் ஆலோசிக்கப்பட்டு வருகிறதா? நேரம் கடத்த கடத்த அந்த நிபந்தனைகளை ஏற்கும் நிலை தவெகவுக்கு ஏற்பட்டுவிடும் என்பதும் தாமதத்தின் பின்னணியா? என்பது போன்ற கேள்விகளும் தவெகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இது அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வுகளை கவனமாக உற்றுநோக்கி வரும் மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசிக நிர்வாகிகள் இன்று கட்சியின் அலுவலகத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், செய்தியாளர்களை இன்று காலை 11 மணிக்கு கட்சி சார்பில் அழைக்கவில்லை. இன்று மாலைதான் அறிவிப்பு வெளியாகும். அதற்கு முறைப்படி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
Summary
The VKC has announced that an announcement regarding its support for the TVK will be made at 4 pm today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக-வுக்கு விசிக ஆதரவு? மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
தொலைபேசியில் அழைத்து ஆதரவு கேட்டார் விஜய்: திருமாவளவன்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


