பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பல மாதங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் இன்று அதிகாலை நாடு முழுவதும் ஏற்றப்பட்டன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 2.83 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் 103.67-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.86 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 95.25-க்கும் விற்பனையாகிறது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள்.
பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has appealed to the TVK government to reduce the sales tax on petrol and diesel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை: மத்திய அரசு அறிவிப்பு
மேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பீஸ் கேரியர் திருட்டு போனதா? இபிஎஸ் கேள்வி






