நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து...

News image

முதல்வர் விஜய் - படம்: டிஎன்டிஐபிஆர்

Updated On :20 மே 2026, 7:32 pm IST

விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண்
எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று(மே 20) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சுமார் 40,000 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறை,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் மேற்கண்ட நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயப் பெருமக்கள், மட்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்கும், இதன்மூலம் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்கும் வழிவகை ஏற்படும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  

மேலும், விவசாயப் பெருமக்கள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டுமென்றும், விவசாயிகள் மற்றும் மட்பாண்டத் தொழிலாளர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களின் மேற்பார்வையில் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளர்கள்  மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலான வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்கு tnesevai.tn.gov.in இணையதள வாயிலாக பதிந்து விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பித்த 10 நாள்களுக்குள் தொடர்புடைய வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்படும்.

இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றிட 2026-2027 ஆம் ஆண்டிற்கான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிடக் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி இத்திட்டத்தைக் கண்காணிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.

Summary

A review meeting regarding the granting of permission to extract silt from water bodies, in the interest of farmers, was held today (May 20) under the leadership of Chief Minister C. Joseph Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.