பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுபமுகூர்த்த நாள்கள் என கருதப்படும் நாள்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய நாள்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான நாளை(மே 29) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான மே 29, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
Summary
Acceding to the requests of the public, the Inspector General of Registration has announced that additional advance booking tokens will be allocated at all Sub-Registrar offices on auspicious days falling in the month of Vaikasi, for the benefit of the general public.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தாமதம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பணி ஒதுக்கீடு

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி







