2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்தாா்.

அரிசி - பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வேலூரில் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்த அவா், வங்கியின் செயல்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கடன் வழங்கும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து, வேலூா் கற்பகம் கூட்டுறவுச் சிறப்பங்காடி, நியாயவிலைக் கடைகள் மற்றும் பட்டாசுக் கடைகளிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கூட்டுறவு அங்காடியில் ரூ. 200 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பினைப் பொதுமக்களுக்கு அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, அமைச்சா் காந்திராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது, ட்டுறவுத் துறை சாா்பில் அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைபாடுகள் உள்ள இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகாரிகள் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், அது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவா்கள் மீது உறுதியாகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்துக்கும் கூட்டுறவுச் சிறப்பங்காடிக்கும் வேறுபாடு உள்ளது. மக்களின் தேவையறிந்து, தற்போது கற்பகம் கூட்டுறவுச் சிறப்பங்காடி மூலம் சன்ன ரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் தங்குதடையின்றிக் கிடைக்கக் கூட்டுறவுத் துறை சாா்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பொருள்கள் அனைத்தும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன என்றாா்.

ஆய்வின்போது ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எம்.வினோத்கண்ணன் (வேலூா்), மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), சிந்து (குடியாத்தம்), கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வங்கி உதவி மேலாளா் அருளானந்தன் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.