டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்க மக்கள் அலைய வேண்டுமா? பிரதமருக்கு சிபிஎம் கேள்வி!

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே? என சிபிஎம் கேள்வி...

cpim questions pm modi

பிரதமர் மோடி - சிபிஎம் மாநிலச் செயலர் பெ. சண்முகம் - எக்ஸ்

Updated On :

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டைப் பெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலினை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மூலம் நாட்டில் சுமார் 13 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாது என்பது ஏழைகள் மீதான பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல் எனக் கூறி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, இன்று (நவ. 4) அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“முன்னொரு காலத்தில் அனைத்திற்கும் ரேஷன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்திற்கும் ஆதாரம் "ஆதார்" என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்கிறார்கள்.

அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகளே! எனவே, இது ஏழைகள் மீதான பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல். முதலாளிகளிடம் முகவரி கூட கேட்காத ஆட்சியாளர்கள் ஏழைகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள்.

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Summary

CPIM has posed a question to PM Modi: must people spend their entire lives running around just to prove their identity?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.