ஆகம கோயில் குறித்த தகவல்களை நவம்பா் 25-க்குள் தெரிவிக்கலாம்
ஆகம கோயில் குறித்த விடுபட்ட தகவல்களை நவ.25-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

ஆகம கோயில் குறித்த விடுபட்ட தகவல்களை நவ.25-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்களை கண்டறிய 2025-இல் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட 34,971 கோயில்கள் தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இந்தக் கோயில்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் விடுபட்டு இருப்பின் கடந்த நவ.10-க்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடுபட்ட ஆகம கோயில் குறித்த தகவல்களை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை. நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் www.hrce.tn.gov.in மூலமும் நவ.25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

