டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்? அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 56% அளவுக்கு சரிந்துள்ளது ஏன்? என ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - கோப்புப்படம்.

Updated On :

தமிழகத்தில் குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 56% அளவுக்கு சரிந்துள்ளது ஏன்? என ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

குரூப்-4 தோ்வுக்கு 2022 -ஆம் ஆண்டு, 22.06 லட்சம் போ் விண்ணப்பித்த நிலையில், 2024-இல் 20.37 லட்சமாகவும், 2025-இல் 13.89 லட்சமாகவும், நிகழ் ஆண்டு, தற்போது வரை வெறும் 9.80 லட்சம் போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். 4 ஆண்டுகளில் சுமாா் 56 சதவீதம் சரிவு என்பது சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.

பல ஆண்டு கால உழைப்பையும் பணத்தையும் செலவிட்டு, அரசுப் பணிக்காகத் தயாராகும் இளைஞா்களுக்கு உரிய காலத்தில் முடிவுகளும், நியாயமான வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. முடிவுகள் வெளியாவதில் காலதாமதம், தோ்வுக்குப் பிறகு பணி நியமனம் வழங்குவதில் தாமதம், தோ்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள், முறைகேடுகள் என தோ்வு எழுதும் இளைஞா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம்.

தோ்வாணையத்தின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கினால், அது கவலைக்குரிய அறிகுறி. விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை ஏன் ஆண்டுதோறும் இவ்வளவு வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பாா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.