சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

பின்வாங்குவதோ தயங்குவதோ கிடையாது..! சாதனை படைத்த மாயாவின் பேட்டி!

தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி அளித்த பேட்டி குறித்து...

Chennai: India's Maaya Rajeshwaran celebrates after defeating Poland's Weronika Falkowska, unseen, during their Round of 16 match at the WTA 250 Chennai Open tennis tournament, in Chennai, Tamil Nadu, Wednesday, Nov. 4, 2026. (PTI Photo/R Senthilkumar)

தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் - PTI

Updated On :

தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி (17 வயது) சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, 2012ல் சானியா மிர்ஸா காலிறுதிக்கு முன்னேறி இருந்தார். தற்போது, இந்த சாதனை சமன்செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

இதெல்லாம் வழக்கமாக ஒரு விளையாட்டு வீராங்கனை வாழ்வின் ஒரு பகுதிதான். சில விஷயங்களை சரியாக செய்ய வேண்டி இருக்கிறது. உதவி தேவைப்படுவது எப்போது ஒரு நல்ல விஷயம்தான்.

நமக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது எப்போதும் நன்றாகவே இருக்கும். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் நமக்கு அங்கீராகம் கிடைப்பது என்பது எப்போதும் நன்றாகத்தான் இருக்கும்.

முடிவாக எல்லாமே டென்னிஸைப் பற்றித்தான் சிந்திக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கற்றுக்கொண்டு நன்றாக விளையாடுங்கள்.

செவ்வாய்க்கிழமை போல எனக்கு இந்த வெற்றி நன்றாக இல்லை. ஆனாலும், வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி. ஃபால்கோவ்ஸ்கா திருப்பி அடிக்கும் பந்துகள் கடினமாக இருந்தன. தொடக்கத்தில் எனக்கு தயக்கம் இருந்தது. பின்னர், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று விளையாடினேன்.

பின்வாங்குவது அல்லது தயங்குவதால் எதுவும் நமக்கு உதவப்போவது இல்லை. அதனால் அடித்து ஆட முடிவெடுத்தேன். சரியான இடங்களைப் பார்த்து அடித்தால் வெற்றிக்கான சதவிகிதம் அதிகரிக்கும்.

ப்ரோ பதக்கத்தை வெல்ல நினைத்தேன். இந்தாண்டின் தொடக்கத்தில் லாகோஸில் தொடங்கியது. எனக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. நமக்கு குறுகிய கால இலக்குகள் இருக்கின்றன. அதற்காக என்னை நானே அழுத்ததுக்கு உள்ளாக்க விரும்புகிறேன் என்றார்.

Summary

Maaya Rajeshwaran keen to keep feet on ground after landmark WTA quarterfinal entry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.