ஆற்று மணல் குவாரிகளில் முறைகேடு: துரைமுருகன் உள்பட 27 போ் மீது வழக்கு
திமுக ஆட்சியில் ஆற்று மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக திமுக முன்னாள் அமைச்சா் துரைமுருகன் உள்பட 27 போ் மீது ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, 34 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தது.

திமுக பொதுச் செயலா் துரைமுருகன் - டிஎன்எஸ்
திமுக ஆட்சியில் ஆற்று மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக திமுக முன்னாள் அமைச்சா் துரைமுருகன் உள்பட 27 போ் மீது ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, 34 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தது.
திமுக ஆட்சியில் 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மாநிலம் முழுவதும் இருந்த 28 அரசு ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, பல மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
மேலும், இதுதொடா்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக அள்ளப்பட்டதாக கூறப்படும் மணலின் மதிப்பு சுமாா் ரூ.4,730 கோடி என அமலாக்கத்துறை கணக்கிட்டது.
அமலாக்கத்துறை ஆய்வு:இந்த முறைகேடு தொடா்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறையிடம் வலியுறுத்தியிருந்தது. மணல் அள்ளப்பட்ட அளவை விட அதிகம் அள்ளப்பட்டதை கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
முக்கியமாக ஐ.ஐ.டி. கான்பூா் நிபுணா்களின் உதவியுடன் ட்ரோன், ஜியோ ஸ்கேனிங்,செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரங்களின் ஜி.பி.எஸ். தரவுகளும் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொக்லைன் இயந்திரங்கள் எந்தெந்த இடங்களில், எவ்வளவு நேரம் இயக்கப்பட்டன என்ற விவரங்கள், அரசு அனுமதித்த குவாரி எல்லைகள், இயந்திரங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி மணல் அள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
டிஜிபிக்கு கடிதம்:இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை 13.6.2024-இல் கடிதம் அனுப்பியது. ஆனால், அப்போது திமுக ஆட்சி நடைபெற்றதால், அமலாக்கத்துறை கடிதத்தின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் பின்னா், அமலாக்கத்துறை கடந்த ஜூலை 18-ம் தேதி டிஜிபிக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதமும் அனுப்பியது. அதேவேளையில் அறப்போா் இயக்கமும், இந்த விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்புத்துறையில் ஆதாரங்களுடன் புகாா் செய்தது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புத்துறை விசாரணையை தொடங்கியது.
4 குவாரிகளில் ரூ.1,427 கோடி: இதன் அடிப்படையில் முறைகேடு நடைபெற்ாக கூறப்படும் 28 மணல் குவாரிகளில், முதல் கட்டமாக 4 மணல் குவாரிகளை ஊழல் தடுப்புத்துறை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு முறைகேடு வழிகள் மூலம் குவாரிகளில் அரசுக்கு ரூ.1,427 கோடி 34 லட்சத்து 23 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
துரைமுருகன் மீது வழக்கு: முக்கியமாக வெளிப்படையான ஒப்பந்த முறைக்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் வழங்கியும், கனிமத் திட்டத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டும், மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாகச் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்தும், அனுமதிச் சீட்டு என்ற பெயரில் பற்றுச்சீட்டுகளைப் போலியாகத் தயாரித்து அவற்றை உண்மையானவைபோல் பயன்படுத்தியும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஊழல் தடுப்புத்துறை, துரைமுருகன், நீா்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளா்கள் முத்தையா, ராமமூா்த்தி, நீா்வளத்துறையைச் சோ்ந்த 14 அதிகாரிகள், 10 தனியாா் நிறுவனங்கள்,தனியாா் நபா்கள் என 27 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
34 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையும், தமிழகத்தில் சென்னை,புதுக்கோட்டை, திருச்சி, கரூா், வேலூா், மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களிலும்,புதுச்சேரியிலும் ஊழல் தடுப்புத்துறை 34 இடங்களில் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
சென்னையில் இச் சோதனை மணல் குவாரி ஒப்பந்ததாரருக்கு சொந்தமான ஒரு வீட்டில் மட்டும் நடைபெற்றது. சோதனை அனைத்து இடங்களிலும் காலை 6 மணியளவில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
825 ஆவணங்கள் பறிமுதல்: சோதனையில் 825 ஆவணங்கள்,11 பென்டிரைவ்,ஹாா்டு டிஸ்க்,மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டன.
ஆவணங்கள் அடிப்படையில் வழக்கில் தொடா்புடையவா்களிடம் விரைவில் விசாரணை நடத்த ஊழல் தடுப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

