தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!

விண்ணில் சீறிப்பாய்ந்த வண்ணமயமான வாணவேடிக்கைகள்; பறக்கும் கேமரா காட்சிகளில் கண்கவர் ஒளிச்சிதறல்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விண்ணில் சீறிப்பாய்ந்த வண்ணமயமான வாணவேடிக்கைகன் குறித்து...

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விண்ணில் சீறிப்பாய்ந்த வண்ணமயமான வாணவேடிக்கைகள். பறக்கும் கேமரா காட்சிகளில் பல்வேறு வண்ணங்களில் ஒளிர்ந்து கண்களுக்கு விருந்தளித்தன - டிஎன்எஸ்

Updated On :

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விண்ணில் சீறிப்பாய்ந்த வண்ணமயமான வாணவேடிக்கைகள், பறக்கும் கேமரா காட்சிகளில் பல்வேறு வண்ணங்களில் ஒளிர்ந்து கண்களுக்கு விருந்தளித்தன. விண்ணில் ஒளிரும் காட்சிகள் பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்தன.

தீபாவளி என்றாலே பட்டாசும், இனிப்புகளும் தான் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிக்கும். முன்னதாக சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் புத்தாடைகள் அணிந்து சுவாமியை கும்பிட்டு, பெற்றோர்களிடம் ஆசி பெற்று தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்குவார்கள்.

குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் காலையில் எண்ணை தேய்த்து நீராடி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர். அதாவது புதிதாக திருமணமாகும் தம்பதிகள் தங்களது முதல் தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். பெண் வீட்டார் தரப்பில் தனது மகள் மற்றும் மருமகன்களுக்கு தலை தீபாவளி பரிசாக புத்தாடைகள், புது நகைகள் மற்றும் இனிப்பு, பலகாரங்கள், பரிசுப் பொருள்கள் வழங்கி மகிழ்விப்பார்கள்.

தீபாவளி முன்னிட்டு அதிகாலையிலேயே புதுமண தம்பதியினர் வீட்டில் சுவாமி கும்பிட்டு, புத்தாடைகள் அணிந்து, பெரியோர்களின் ஆசி பெற்று இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து தலை தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

விண்ணில் சீறிப்பாய்ந்த வண்ணமயமான வானவேடிக்கைகள்

விண்ணில் சீறிப்பாய்ந்த வண்ணமயமான வானவேடிக்கைகள்

பல நாள்களாக நீடித்த பரபரப்பான சூழல் மற்றும் ஷாப்பிங்கிற்குப் பிறகு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகள் கடைகளில் மின்விளக்குகளால் அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றியும் வழிபட்டனர். வழக்கம்போல பட்டாசுகள் வெடிக்கப்பட்டு பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி நகரம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இரவு நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் மற்றும் வண்ண வண்ண வாணவேடிக்கைகளை வெடித்து தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

வானில் சீறிப்பாய்ந்து வெடித்த வண்ணமயமான பட்டாசுகள் இரவு வானில் பல்வேறு வண்ணங்களில் ஒளிர்ந்து கண்களுக்கு விருந்தளித்தன.

குறிப்பாக, பறக்கும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வான்வழிக் காட்சிகளில், புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் வெடிக்கப்பட்ட வாணவேடிக்கைகள் விண்ணில் ஒளிரும் காட்சிகள் பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்தன.

வானில் தோன்றிய வண்ணமயமான ஒளிச்சிதறல்கள், தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியையும் கொண்டாட்ட உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தன.

Diwali: Colorful fireworks soared into the sky; dazzling displays of light captured by flying cameras!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.