திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது; மு.க. ஸ்டாலினின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது! வைகோ
நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி...

வைகோ
திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் மு.க. ஸ்டாலின் முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக வந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று பாளையங்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற திருமண விழா குறித்து பேசிய வைகோ, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த மணமக்கள், நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்ற அந்தத் திருமணத்திற்காக பல ஆயிரம் பேர் கிரீஸ் நாட்டிற்குச் சென்றதாகவும், நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார். ஏன் தமிழகத்தில் திருமணம் நடைபெறுவதற்கான இடங்கள் இல்லையா?
அதானி இந்த ஆட்சியை கைப்பற்ற நினைத்ததாகவும், இதுகுறித்து விஜய்யை நேரடியாகச் சந்தித்து அதானியை உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும், அதேபோல் விஜய்யும் அனுமதிக்கவில்லை என்றும் கூறினார்.
கடந்த காலங்களில் பல்வேறு ஆட்சிகளில் ஊழல் நிறைந்து காணப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் எந்தத் துறையிலும் ஊழல் இல்லை என்றும் நேர்மையான அதிகாரிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகார வர்க்கம் செயல்படும் என்று கூறிய அவர், தற்போதைய ஆட்சி இன்னும் ஆறு மாதங்கள் நீடிக்கும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கும் பதிலளித்தார். இந்த ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, அப்படியே இந்த ஆட்சியை கவிழ்த்தால்கூட அதிகமாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள், இதற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்றார்.
தமிழகத்தில் இதனை ஆட்சி என்று சொல்லக் கூடாது, காட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
திரையில் கதாநாயகனாக இருக்கும் தமிழக முதல்வர் நிஜத்தில் வில்லனாக இருக்கிறார் என ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த வைகோ, சில கேள்விகள் முட்டாள்தனமானவை என்றும் இதற்கெல்லாம் நான் பதில் அளிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தமிழக முதல்வருக்கு அரோகரா, அமைச்சருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பிய கேள்விக்கு, அரோகரா என முழக்கமிட்டது குறித்த கேள்வியை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறினார். தற்போது திருச்செந்தூரில் யாராவது பக்தர்கள் அரோகரா என்று தெரிவித்திருப்பார்கள். திமுக இனி தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை முதல்வர் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Summary
DMK will not come to power again: vaiko
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


