கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: எந்தப் பெண்ணாக இருந்தாலும் நீதி கிடைக்க வேண்டும் - வன்னி அரசு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தைப் பொறுத்தவரை, எந்தப் பெண்ணாக இருந்தாலும் நீதி கிடைக்க வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு பேசியது குறித்து...
வன்னி அரசு - கோப்புப்படம்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தைப் பொறுத்தவரை, எந்தப் பெண்ணாக இருந்தாலும் நீதி கிடைக்க வேண்டும் என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு திங்கள்கிழமை (நவ. 16) தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய மகளிர் ஆணையம் அடுத்த 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னிஅரசு பேசியதாவது:
இந்த விவகாரத்தில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும். அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அதற்கான ஆணையம் விசாரித்து உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
சட்டம் ஒழுங்கு விஷயத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்ற அண்ணாமலையின் பேச்சு நகைச்சுவைதான். தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஒருவேளை அண்ணாமலை கர்நாடக காவல்துறை குறித்துப் பேசுகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
Summary
Regarding the Kallakurichi MLA issue, Minister for Social Justice Vanni Arasu stated on Monday (Nov. 16) that justice must be served for any woman involved.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

