சீர்காழியில் பரபரப்பு: அதிகாலையில் காரில் இறக்கிவிடப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் காரிலிருந்து இறங்கிய சிறுமி மீட்கப்பட்டது குறித்து...

போலீஸ் - கோப்புப்படம்.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் காரிலிருந்து அழுதவாறு இறங்கிய சிறுமியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய 11 வயதுடைய சிறுமி அழுதவாறு நின்றதைப் பார்த்த அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறுமியை மீட்டு எதிரே உள்ள சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காரை ஓட்டி வந்த நபர் காருடன் தப்பிச் சென்றுள்ளதால், போலீஸார் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிறுமி அளித்த தகவலின் பேரில் கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீர்காழி டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Auto drivers rescued a young girl who got out of a car crying at the Sirkazhi new bus stand and handed her over to the police.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


