இந்திய - பசிபிக் உயர் காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்தால் அக்வன் புயல் தமிழகத்துக்கு சாதகம்!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள அக்வான் புயல், கரையைக் கடக்கும் இடம் குறித்து...

Updated On :

இந்திய - பசிபிக் உயர் காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்தால் மட்டுமே அக்வான் புயல் தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும் தற்போது வரை ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் சூழல் நிலவுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

செய்யறிவு (AI) வானிலை மாதிரிகளும், ECMWF இயற்பியல் அடிப்படையிலான வானிலை மாதிரியும் புயலானது, ஆந்திரத்தை நோக்கி நகர்வதாகவே காண்பிக்கின்றன.

குறிப்பாக, ஏஐ மாதிரிகள் புயலானது, ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி செல்வதற்கான ஒரே மாதிரியான கணிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. புயலின் நகர்வுப் பாதையைத் தொடர்ந்து கணிப்பதில் ஏஐ மாதிரிகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

புயலின் நகர்வைத் தீர்மானப்பதில், இந்திய - பசிபிக் உயர் காற்றழுத்தத்தின் பங்கு மிக முக்கியம். அக்வான் புயல் தமிழ்நாட்டின் கடற்கரையை நெருங்கி வருவதற்கான வாய்ப்பு ஏற்பட வேண்டுமானால், இந்திய - பசிபிக் உயர் காற்றழுத்தமானது மேலும் மேற்கு நோக்கி நகர வேண்டும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை மேற்கு நோக்கிய நகர்வு நிகழவில்லை.

தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, அக்வான் புயல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கிச் செல்வதற்கே அதிக சாதகமான சூழல் நிலவுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Private weather forecaster Pradeep John has stated that Cyclone 'Akwan' will approach the Tamil Nadu coast only if the high-pressure system over the Indo-Pacific region shifts westward; as of now, the prevailing conditions indicate that it is likely to make landfall along the Andhra Pradesh coast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER