நாங்கள் நண்பர்கள்தான், ஆனால்..! முதல்வர் விஜய் குறித்து டி.கே. சிவகுமார் கருத்து!

முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து டி.கே. சிவகுமார் கருத்து...

delhi vijay dk shivakumar

தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய், டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் - Photo: X

Updated On :

தில்லியில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்தது குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த நவ. 13 அன்று கர்நாடகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேக்கேதாட்டு அணைத் திட்டம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய கோரிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருந்தார்.

இதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டிருந்த நிலையில், ”யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும்; எனக்கு அதைப்பற்றி சிறிதும் கவலையில்லை. அணையைக் கட்டுவதில் தெளிவாக இருக்கிறோம்” என்று டி.கே. சிவகுமார் மீண்டும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேக்கேதாட்டு அணை குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தில்லியில் நேற்று (நவ. 16) நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரும், முதல்வர் விஜய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் சில தலைவர்கள் சிரித்தபடி உரையாடும் காணொலி இணையத்தில் வைரலாகியது.

மேக்கேதாட்டு அணை பிரச்னைக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்துகொண்டதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டி.கே. சிவகுமார் கூறியதாவது:

”நிச்சயமாக நாங்கள் நண்பர்கள்தான். தமிழ்நாட்டுக்கு என்று சில அரசியல் சிக்கல்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பார்த்தீர்களா என்று அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகளை நான் கேட்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாகக் கூறுகிறது. நாங்கள் அதைச் செயல்படுத்துவோம். அவர்கள் மறுஆய்வு மனுவுடன் நீதிமன்றத்தை நாடியபோது என்ன நடந்தது? அவர்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

Summary

We are friends, but... - D.K. Shivakumar's comment regarding Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER