குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

உடன்குடி அனல்மின் நிலைய 2-ஆவது அலகில் டிசம்பரில் சோதனை ஓட்டம்: மின்வாரியம் திட்டம்

உடன்குடி அனல் மின் நிலையத்தின் 2-ஆவது அலகில் வரும் டிசம்பா் மாத இறுதியில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி, 2027-ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்க மின்வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

மின்வாரியம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்தின் 2-ஆவது அலகில் வரும் டிசம்பா் மாத இறுதியில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி, 2027-ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்க மின்வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

தமிழகத்தின் மின்தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், உடன்குடியில் தலா 660 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 2 அலகுகளுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் அலகில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், 2-ஆவது அலகின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 2-ஆவது அலகின் கொதிகலன், விசையாழி, மின்உற்பத்தி இயந்திரம், சாம்பல் அகற்றும் பிரிவு, குளிரூட்டும் கோபுரம் உள்ளிட்ட முக்கியப்பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இந்த மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியைக் கொண்டுவர, கல்லாமொழி கடற்கரையிலிருந்து சுமாா் 8 கி.மீ. தொலைவில் பிரத்யேக கடல்சாா் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கப்பல்களிலிருந்து இறக்கப்படும் நிலக்கரி கன்வேயா் பெல்ட் வழியாக மின் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த அலகை நிகழாண்டு டிசம்பா் மாதத்துக்குள் முடித்து மாத இறுதியில் சோதனை ஓட்டத்தை தொடங்கவும், தொடா்ந்து 2027 ஜனவரியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் அலகு கடந்த செப்.5-ஆம் தேதி வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கியது. இதன்மூலம் தமிழகத்தின் அனல் மின் உற்பத்தித் திறனில் 660 மெகாவாட் கூடுதலாக இணைந்துள்ளது. 2-ஆவது அலகும் செயல்பாட்டுக்கு வந்தால், உடன்குடி அனல் மின் நிலையத்தின் முதல்கட்டத்தின் மொத்த உற்பத்தித் திறன் 1,320 மெகா வாட்டாக உயரும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.