முதலீட்டு ரகசியங்களைக் கசியவிட்ட விவகாரம்! வழக்கம்போல திமுகவையே குற்றம் சாட்டும் தவெக அரசு: டிஆர்பி ராஜா
முதலீட்டு ரகசியங்களை முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமை ஊழியர்கள் கசியவிட்ட விவகாரம் குறித்து டிஆர்பி ராஜா கூறியது பற்றி...

டிஆர்பி ராஜா - கோப்புப் படம்
முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமை தமிழகத்துக்கான முதலீடுகள் வெளியேறியதாக வெளியாகும் செய்திகள் வருத்தம் அளிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீட்டு ரகசியங்களை ஆந்திர மாநிலத்துக்குக் கசிய விட்டதாக மாநில அரசுக்கு தொழில் முதலீடு ஆலோசனை வழங்கி வரும் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையில் (Guidance Tamilnadu) பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் (Guidance Tamilnadu), தற்போது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.
நிறுவன ஊழியர்களால் தமிழகத்துக்கான முதலீடுகள் வெளியேறியதாக வெளியாகும் செய்திகள் மேலும் வருத்தம் அளிப்பதாய் இருக்கிறது.
மாநிலத்தின் முதலீட்டு நடவடிக்கைகள், தொழிற்துறை சூழல் அமைப்பு அந்த அளவுக்கு பலவீனமாக இருப்பதாக இந்த அரசு (தவெக) கூற முயல்கிறதா? தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சியில் (2016 - 2021) பணியமர்த்தப்பட்டவர்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது, அவர்களை வெளியே அனுப்பவில்லை. ஏனெனில், நாங்கள் அவர்களின் அனுபவத்தையும், நிறுவனத்தின் வளர்ச்சியையும் மதிக்கிறோம்.
இப்போது தலைமைத்துவத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, அரசின் சொந்த நிறுவனத்தைக் குறைமதிப்புக்கு உட்படுத்திய தவெக அரசு, வழக்கம்போல அதன் தோல்விகளுக்கு திமுகவையே குற்றம் சாட்டுகிறது.
துறையை இழிவுபடுத்துவதை தவெக அரசு நிறுத்த வேண்டும். மாநிலத்தின் திறன்களைக் குறைமதிப்புக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
நிறுவனங்களுக்கு தலைமைதான் தேவை, அரசியல் நாடகங்கள் அல்ல" என்று கூறியுள்ளார்.
Summary
The issue of investment secrets being leaked: As usual, TVK blames the DMK, says Former Minister TRB Rajaa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

