ஹிந்துகளின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் தவெக : எல்.முருகன் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் ஹிந்துகளின் மத நம்பிக்கையைக் காயப்படுத்தும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாக முன்னாள் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

எல்.முருகன் - கோப்புப் படம்

Updated On :

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் ஹிந்துகளின் மத நம்பிக்கையைக் காயப்படுத்தும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாக முன்னாள் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமை தொடா்பான வழக்கில், தமிழக அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் கண்டனத்துக்குரியவை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூண் வெறும் நில அளவைக் கல் என்றும், அதற்கு மத அடையாளம் கற்பிக்கப்படுவதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதங்களை முன்வைத்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு காட்டும் முனைப்பு, ஹிந்துக்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தின் வரலாற்றுப் பின்னணி, ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் பக்தா்களின் மத உணா்வுகள் என எதைப் பற்றியும் தவெக அரசுக்குக் கவலையில்லை. ஹிந்துகளின் மத நம்பிக்கைகளை மத அடையாளம் கற்பித்தல் என்று தவெக அரசு சிறுமைப்படுத்துகிறது. பக்தா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்ததற்காக தவெக அரசு தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.