வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

எங்களிடம் தண்ணீர் இருந்தால், நிச்சயம் தமிழகத்துக்கு வழங்குவோம்! - கர்நாடக முதல்வர் பேச்சு!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு...

Karnataka Chief Minister DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - ANI

Updated On :

காவிரியில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தமிழகத்துக்கு வழங்கத் தயாராக இருப்பதாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.

காவிரியில் இருந்து கர்நாடகம் தரவேண்டிய மீதமுள்ள நீரைத் திறந்து விட உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 20) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

11 ஆயிரம் மில்லியன் கியூபிக் கனஅடி நீரைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தமிழகத்துக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்திடம் போதுமான அளவுக்கு காவிரி நீர் இருந்தால், தமிழகத்துக்கு காவிரி நீரை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும், தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நீர் இருப்பு குறித்த கள நிலவரைத்தையே பிரதிபலிக்கிறது என்றும் முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“எங்களிடம் தண்ணீர் இருந்தால், நிச்சயமாக நாங்கள் தமிழ்நாட்டுக்குத் வழங்குவோம். எங்களிடம் குடிப்பதற்கே போதுமான அளவுக்குத் தண்ணீர் இல்லை. நம் மாநிலத்தை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. நீர் இருப்பு குறித்து நம் விவசாயிகளை நான் ஏற்கெனவே எச்சரித்துள்ளேன்.

இன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதுதான் கள நிலவரம். தமிழ்நாட்டுக்கும் அது தெரியும். நமக்கும் தெரியும். அனைவருக்கும் எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது என்பது தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Karnataka CM Shivakumar has stated that they are prepared to provide water to Tamil Nadu, provided there is sufficient water storage in the Cauvery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.