பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

பெரம்பூர் அம்மா உணவகத்தில் இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் கைது

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், உணவு அருந்த வந்த இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியர் பற்றி..

Female employee arrested for pouring boiling sambar on a youth at Perambur Amma Canteen

கைது செய்யப்பட்ட பெரம்பூர் அம்மா உணவக ஊழியர் உதயபானு.

Updated On :

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், உணவு அருந்த வந்த இளைஞர் மீது பெண் ஊழியர் கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இளைஞருக்கு 55 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் பகுதி, நெடுஞ்செழியன் கோபாலபுரம் முதல் தெருவைச் சேர்ந்த உதயபானு(50), கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாகப் பெரம்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் அம்மா உணவகத்தில் உணவு அருந்துவதற்காக வந்த ராஜேஷ்(19) என்ற இளைஞர், உணவு கேட்டுள்ளார்.

அப்போது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த பெண் ஊழியர் உதயபானு, திடீரென அங்கிருந்த கொதிக்கும் சாம்பாரை எடுத்து ராஜேஷின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷுக்கு சுமார் 55 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதாகக் கூறப்படும் பெண் ஊழியர் உதயபானுவைக் கைது செய்து, சம்பவத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம், அம்மா உணவகத்திற்கு உணவருந்த வரும் பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

An incident where a female employee poured boiling sambar on a youth who came to eat at an Amma Canteen in Chennai's Perambur area has caused great shock and commotion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.