இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

ஆம்லெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தொடர்ந்து குறையும் முட்டை விலை!

முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து...

Egg

முட்டை விலை - பிரதிப் படம்

Updated On :

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் கோழிப் பண்ணையாளர்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும்.

அப்போது, முட்டை, கோழி இறைச்சி நுகர்வு தொடர்ந்து மக்களிடம் குறைந்து வருவதாலும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாலும், தற்போதைய சூழலில் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.60-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் ஆம்லேட், கலக்கி போன்ற முட்டையைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள்கள் விரும்பி சாப்பிடுவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைவுக்கான காரணம்

நாமக்கல் மண்டலத்தில் இருந்து துபை, கத்தார், ஓமன், வளைகுடா நாடுகளுக்கு மாதந்தோறும் 10 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், கோழிகளுக்கான பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, ஓமன் நாட்டில் நாமக்கல் முட்டைக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்கு மட்டும் மாதந்தோறும் 3 கோடி முட்டைகள் கப்பலில் அனுப்பிவைக்கப்படுகின்றன. தற்போது, இந்த முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளன.

Summary

In the Namakkal zone, the price of an egg has been reduced by 20 paise and fixed at Rs. 5.60.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.