என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நிலஅளவைக் கல்: தொல்லியல் துறை ஆய்வறிக்கை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது நில அளவைக் கல் என தமிழக தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது நில அளவைக் கல் என தமிழக தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மலைப் பகுதிகளில் 484 நில அளவைக் கற்கள் அடையாளம் காணப்பட்டு, அவை ஆய்வு செய்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இதன்படி, சிக்கந்தா் தா்கா அருகே இருப்பது தீபத் தூண் இல்லை, நில அளவைக் கல்கல்தான் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த 98 பக்க ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் நிலப்பரப்பைத் துல்லியமாக அளவிடுவதற்காக உருவாக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் திட்டத்தின் (ஜிடிஎஸ்) நிலையங்கள், இன்றும் பல்வேறு இடங்களில் கல் தூண்களாகவும் பாறைகளில் பொறிக்கப்பட்ட குறியீடுகளாகவும் காணப்படுகின்றன என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.