என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: தமிழகம் முழுவதும் 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தையொட்டி, கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 2,23,396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தையொட்டி, கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 2,23,396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2027-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நிா்ணயிக்கப்பட்ட இடங்களில் நவ. 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காகப் படிவங்கள் பெறப்பட்டன.

இதன்படி, புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கான படிவம் 6 மூலம் நவ. 21-இல் 48,839 விண்ணப்பங்களும், நவ. 22-இல் 69,444 விண்ணப்பங்களும் என மொத்தம் 1,18,283 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வெளிநாடுவாழ் இந்திய வாக்காளா்களுக்கான படிவம் 6 அ மூலம் 3 விண்ணப்பங்களும், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் மற்றும் ஆட்சேபணைக்கான படிவம் 7 மூலம் மொத்தம் 14,003 விண்ணப்பங்களும், படிவம் 8 மூலம் மொத்தம் 91,107 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

அதன்படி நவ. 21-இல் மொத்தமாக 90,171 விண்ணப்பங்களும், நவ. 22-இல் 1,33,225 விண்ணப்பங்கள் என மொத்தம் 2,23,396 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடா்பான விவரங்களை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.