கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

பெரியார் அறிவுலக ஊழல்! அகல் விளக்கு உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்க மனு!

அகல் விளக்கு உரிமையாளரை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல்...

பெரியார் அறிவுலகம்

பெரியார் அறிவுலகம்

Updated On :

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நூலகங்களுக்கு ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை சப்ளை செய்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நூலகங்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்த அகல் விளக்கு பதிப்பகத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.1.74 கோடி வழங்கியிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது. இந்த நிலையில், மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மோகன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. அதனால், அவரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Summary

Periyar Arivulagam corruption - Petition filed to take the owner of 'Agal Vilakku' into custody for questioning!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.