தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

பெரியார் அறிவுலக ஊழல்! வழக்குப் பதிந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக மனு!

பெரியார் அறிவுலக ஊழல் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக மனு தாக்கல்...

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - (கோப்புப் படம்)

Updated On :

சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ. பரந்தாமன் சார்பில் வழக்கறிஞர் தாமோதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை பெரியார் அறிவுலகத்துக்கு 50 கோடி ரூபாய் புத்தகங்கள் கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த பெரியார் அறிவுலகம் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

புத்தகங்கள் பரிந்துரைக்காக 117 பேர் அடங்கிய புத்தக பரிந்துரைக் குழு அமைத்து கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோனிகா ரவி என்ற ஒரே எழுத்தாளரிடம் இருந்து 6 மாதங்களில் 162 புத்தகங்களும், லட்சுமி மோகன், தாமரை பன்னீர், தாமரை முரளி, ஜோதி ஹரிஹரன் ஆகிய எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பெயரில் எழுத்தாளர்கள் இருக்கின்றனரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. புத்தக பரிந்துரைக் குழுவில் உறுப்பினராக இருந்த பெருமாள் முருகன், அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து 1800 புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்துக்கு வாங்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்த புத்தக கொள்முதல் ஊழல் குறித்து கண்டனங்களைப் பதிவு செய்தனர். அரசுத் தரப்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் விசாரணைக்கு குழு அமைத்துள்ளதாக உத்தரவிட்டுள்ளார். இந்த புத்தக கொள்முதலில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கடந்த 7-ஆம் தேதி, நான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அரசு நியமித்துள்ள நிர்வாக ரீதியிலான விசாரணைக் குழு போதுமானதாக இல்லை. எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், முந்தைய அரசு மீது குற்றம்சாட்டுவதால், இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பான கோப்புகளை பறிமுதல் செய்து பத்திரப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். எனது புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Periyar Arivulagam Corruption! DMK files petition seeking an order to register a case and conduct an investigation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.