சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது குறிர்த்து...

Chief Secretary of Tamil Nadu Dr. M. Sai Kumar, IAS

தலைமைச் செயலர் சாய் குமார் - கோப்புப் படம்

Updated On :

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபமேற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது வேதனை தெரிவித்தனர். மேலும், மலை உச்சியில் உள்ள கல் தூணில் நாளை (நவ. 28) தீபமேற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், அறநிலையத் துறை ஆணையர், மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், கோயில் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

Summary

Supreme Court orders Chief Secretary to appear in person regarding the Tirupparankundram 'deepam' issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.