தமிழ்க் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்யும் பாஜக: மாணிக்கம் தாகூர்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து மாணிக்கம் தாகூர் பேசியது பற்றி...

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைக் குறிப்பிட்டு, தமிழ்க் கடவுள் முருகனை வைத்து பாஜகவினர் அரசியல் செய்வதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல் தூணில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சனிக்கிழமை (நவ. 28) மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வதற்கான தேவை கிடையாது.
கார்த்திகை தீபம் என்பது புனிதமானது. முருகனை நம்பி, முருகனுக்காக நடத்தப்படும் விழா. அதை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம் என்று மரபை மாற்ற முடியாது.
மதுரை ரயில் நிலையத்தில் தீபமேற்றுவோம் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகிறார். பாஜகவினருக்கு தமிழ்க் கடவுள் முருகனை பற்றி தெரியவில்லை. தமிழரின் உணர்ச்சிகள் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்குத் தெரியவில்லை.
திருச்செந்தூர் கோயிலில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டையின்றி துண்டுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும். ஏனெனில், எல்லோரும் சமம் என்பதைக் காட்டுவதற்காகத்தான். இதுதான் தமிழர்களின் கலாசாரம்.
அதனை மாற்ற முடியுமா? சூரசம்ஹாரத்தை வேறொரு நாளில் மாற்ற முடியுமா?
மதங்களை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்த முடியுமோ, அவையெல்லாம் பாஜகவினருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும்தான் தெரியும்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவின் முன்னே அமைந்துள்ள தூணில் தீபமேற்றுவதுதான் அவர்களின் தேவை. தர்காவுக்கும் தூணுக்கும் இடையிலான பிரச்னையைக் கிளப்பிவிட முயற்சிக்கின்றனர்.
சனிக்கிழமையில் யாரேனும் தீபமேற்றுவார்களா? முருகனை வைத்து யாரும் அரசியலில் ஈடுபடக் கூடாது" என்று தெரிவித்தார்.
Summary
BJP playing politics using the Tamil deity Murugan, says Congress MP Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


